பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!

பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!

குப்பையில மிதக்குதடா குளிர் பானம்
குளிரூட்டி இல்லாது இவை காணம்
குசினியில சமையலது பெண் பாவம்
குழாயில காஸ்இல்லா அவை சாபம்

விறகெரிந்த காலமது மறந்தாச்சு – இன்று
வீடெல்லாம் மீள இவை வந்தாச்சு
ஆடம்பர வீடெல்லாம் அவிழ்ந்தாச்சு
அவை சேர்த்த பொருள் எல்லாம் வீணாச்சு

கோட்டையிலே ஆண்டவரும் வீழ்ந்தாச்சு
கொடும்பாவி எரியும் நிலை வாந்தாச்சு
வீதியில மக்கள் எல்லாம் கூடியாச்சு
விதி மறந்தார் சதிக்குள்ளே வீழ்ந்தாச்சு

வாசல் படி கூட்டுமாறு வந்தாச்சு
வாய்க்கரிசி போட வந்தான் சொன்னாச்சு
தன் பலத்தில் வாழ்வேன் என்றார் என்னாச்சு
தமிழர் பலம் வேண்டும் நிலை என்றாச்சு

நாறடித்தான் ஆட்சி இவன் என்றாச்சு
நாட்டை விட்டு ஓடும் நிலை என்றாச்சு
நம் நாட்டை நாம் காக்க தீர்வு வேண்டும்
நாம் தமிழர் வந்தால் மட்டும் நாடு எழும்

நீர் மூலம் ஆக்கினாய் தமிழரைத் தான்
நிர்வாணமாய் ஆனாய் நீ கேவலம் தான்
சிங்களவர் தமிழர் எல்லாம் ஓர் இனம் தான்
சிறை வைத்தான் ஆட்ச்சியாளன் கொடியவன்தான்

ஏறி அன்று ஆட்டம் போட்டாய் ஏன் ராசா – இன்று
எமன் வந்தான் வாசலிலே ஏன் ராசா
நாடு விற்றாய் சீனாவிடம் ஏன் ராசா
நாட்டை விட்டு ஓட வைப்பான் பார் ராசா

பிரபாகரன் ஆண்ட காலம் பொற்காலம்
பிடரி பட சொல்லுதடா இக்காலம்
பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க
பட்டியணியால் சாக வேண்டாம் நாங்க தாங்க ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-03-2022

Author: நிருபர் காவலன்

Leave a Reply

Your email address will not be published.