முல்லைத்தீவில் -கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவி –

மர்மகொலை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

முல்லைத்தீவில் -கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவி –

முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து 30.12.2020 அன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உயிரிழந்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டனர்.

இதனையடுத்து, கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் நீண்டகாலத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த நபரின் மனைவி, உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொன்னகர் பகுதியினை சேர்ந்த இருவரும் கேப்பாபிலவினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு

கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Author: நிருபர் காவலன்