விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை

விஜய் - பிரியங்கா சோப்ரா
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை

முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடித்த பிரபல நடிகை ஒருவர், அவரிடம் கற்றுக் கொண்ட பழக்கத்தை தற்போதும் பின்பற்றுவதாக கூறி இருக்கிறார்.

விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை
விஜய்


விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் உலக அழகி பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு பாலிவுட் சென்றவர் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டார். ஆனால்

விஜய்யிடம் தான் கற்ற பழக்கம் ஒன்றை இப்போது வரை கடைபிடித்து வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

விஜய் – பிரியங்கா சோப்ரா

இதுபற்றி பிரியங்கா சோப்ரா கூறும்போது, “தமிழன் படத்தில் நடித்தபோது சினிமா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒவ்வொரு காட்சி முடிந்தாலும் கூட கேரவன் பக்கமே போகாமல்

செட்டிலேயே அமர்ந்திருப்பார் விஜய். அப்போது அவரிடம் நான் கண்டு வியந்த அந்த பழக்கத்தை இப்போதுவரை கடைபிடித்து வருகிறேன். படக்குழுவினரே வந்து அடுத்த காட்சிக்கு இன்னும் அதிக

நேரம் ஆகும் என்று சொன்னால் மட்டுமே கேரவனுக்கு செல்வேன். மற்றபடி படப்பிடிப்பு தளத்தில் எதுபற்றியாவது தெரிந்து கொள்வதற்காக சுற்றிக் கொண்டே தான் இருப்பேன்” என கூறியுள்ளார்

Author: நிருபர் காவலன்