பொங்கல் வேளை வெடித்த அடுப்பு

சிதறும் காஸ் சிலிண்டர்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பொங்கல் வேளை வெடித்த அடுப்பு

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவத்தூர நவஜனப்பதய பிரதேசத்தில், ஒரு வீட்டில் சமையல் எரிவாயு அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது.

பொங்கல் தினமான நேற்று, காலை உணவை சமைத்துக் கொண்டு இருந்த போது திடீரென அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

கம்பளை மாவத்தூர நகரில் இருக்கும் எரிவாயு சிலிண்டர் வியாபார நிலையத்திற்கு புதிதாக 60 சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் அந்த கடையில் வாங்கிய புதிய சிலிண்டராலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Author: நிருபர் காவலன்