கடத்தல் குழுவில் பிரமுகர்களின் மனைவிகள்- விசாரிக்க தயங்கிய போலீசார்

போலீசார் விசாரணை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கடத்தல் குழுவில் பிரமுகர்களின் மனைவிகள்- விசாரிக்க தயங்கிய போலீசார்

மனைவி மாற்றும் குழுக்களில் இடம்பெற்ற கோவா மற்றும் தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பற்றிய முக்கிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

3 ஆண்டுகளாக மனைவி மாற்றும் குழுக்களில் முக்கிய பிரமுகர்களின் மனைவிகள்- விசாரிக்க தயங்கிய போலீசார்
போலீசார் விசாரணை


கேரளாவில் மனைவி மாற்றும் குழுக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது இப்பிரச்சினையை வெளியே கொண்டு வந்த பெண், 2 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி போலீசில் புகார் செய்துள்ளார். அப்போது இந்த பிரச்சினை பற்றி போலீசார் முறையாக விசாரிக்க வில்லை.

இதற்கு காரணம் என்ன? என்பது பற்றி இப்போது தகவல் வெளியாகி உள்ளது. அதன்விபரம்:-

மனைவி மாற்றும் குழுக்கள் பற்றிய தகவல் கிடைத்ததும் முதலில் இதனை போலீசார் பெரிதாக நினைக்கவில்லை. வேண்டுமென்றே புகார் கூறுவதாக எண்ணினர்.

அதன்பின்பு தொடர்ந்து சிலர் இதுபோன்ற புகார்களை கூற போலீசார், இக்குழுக்களின் பின்னணி குறித்து விசாரிக்க தொடங்கினர். அப்போது தான் இக்குழுவில் பல முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவியரும் உறுப்பினராக இருப்பதை தெரிந்து கொண்டனர்.

விசாரணை என்றால் அவர்களையும் அழைக்க வேண்டும் என்று கருதிய போலீசார், அதற்கு தயங்கி புகாரை முடித்து வைப்பதிலேயே ஆர்வம் காட்டி உள்ளனர்.

இப்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதும், அப்போது இந்த புகாரை விசாரித்த அதிகாரிகள் தங்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

தற்போது இந்த வழக்கின் விசாரணையை கேரள உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இந்த குழுக்களில் இடம்பெற்ற கோவா மற்றும் தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பற்றிய முக்கிய விபரங்களை சேகரித்து வருகிறார்கள். அவர்களை பிடித்தால் மனைவி மாற்றும் குழுக்களின் நெட்வொர்க் பற்றிய முழு விபரமும் தெரியவரும் என்று கருதுகிறார்கள்.

Author: நிருபர் காவலன்