உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

தவிக்கிறேன்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

என்ன செய் தாயோ
என்னை ஏங்க வைத்தாயோ
என்னை ஏங்க வைத்தேனோ
என் இதயம் பறித்தாயோ

முன் பனியாய் பின்னிரவில்
முன்னே வாராயோ – நான்
முழு நிலவில் குளித்திட
முழு உலா வாராயோ

எதுகை மோனை எனதாகும் – என்
ஏக்கம் வாங்கு உனதாகும்
படித்து பாரு புதிராகும்
படைக்க முனை விழிப்பாகும்

சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
சங்கதி இருக்காதே
அந்தி சாயும் வேளையிலே
ஆள் மனம் தூங்காதே

முத்தம் தரவா முன்னே வரவா
முழு நிலவே பதில் தர வா
நித்தம் வரவா நீளும் இரவா
நினைவில் வைத்திட வா

உன்னை எண்ணி தவிக்கிறேன்
உருகி மெழுகாய் அழுகிறேன்
வின் விட்டு வாராயோ
விழுந்து உடல் தழுவாயோ ..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 03-01-2022

Author: நிருபர் காவலன்