ஓடி போ …!

ஓடி போ
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஓடி போ …!

சிந்தைக்குள்ளே உன்னை வைத்தால்
சிகரம் உன்னை அழைக்கும்
மந்தைக்குள்ளே உன்னை வைத்தால்
மன்றம் உன்னை இழிக்கும்

விந்தைக்குள்ளே உன்னை வைத்தால்
விண்ணும் உன்னை பாடும்
சந்தைக்குள்ளே உன்னை வைத்தால்
சகபாடி வந்து வாங்கும்

முந்தைசெயல் விளங்கி நிற்பின்
முழு உலகும் பாடும்
இன்றைசெயல் இயம்பி நிற்பின்
இன்றே ஏறி மிதிக்கும்

கந்தல் உடை ஆனாலுன்னை
கட்டி வந்தே அணைக்கும்
கந்து வட்டி ஆனாலுன்னை
காத் திருந்து வெட்டும்

விந்தை உளார் யாரென்று
வீடு காணி சொல்லும் – இந்த
விந்தை கூர் வாயும்நன்று
விந்தை செயல் கொட்டும்

முந்தை உரை நாவெல்லாம்
முளை இன்றி வாடும் – இந்த
பிந்தை விதை நிலமாளும் -கால்
பிடரி பட ஓடும் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 02-01-2022

Author: நிருபர் காவலன்