மாதவிடாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீங்க.

மாதவிடாய் வலி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

மாதவிடாய் நாட்களில் இதை செய்ய மறக்காதீங்க.

மாதவிடாய் நாட்களில் வெகுநேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது, பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.

  • ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும். மாதவிடாய் நாள்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்.
  • உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஹார்மோன் சுரப்பை சமநிலையில் வைத்துக்கொள்ளலாம். மாதவிடாயின்போது மட்டுமன்றி தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. மாதவிடாய்க் காலத்தில் செய்யும் உடற்பயிற்சிகள் மிகவும் எளிமையானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
  • மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். திரவ வடிவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெந்நீர் அருந்துவது, சூடான நீரைக்கொண்டு வயிற்றுப்பகுதியில் ஒத்தடம் கொடுப்பது போன்றவை வலி உணர்வைக் குறைக்கும்.
  • மாதவிடாயின்போது பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை, `மூட் ஸ்விங்க்ஸ்’. அதைக்கட்டுபடுத்த, உணவில் ஒமேகா 3 போன்ற, நல்ல கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளலாம். தியானம் செய்வது, மனதை ஒருநிலைப்படுத்தும்.
  • அடிக்கடி நாப்கினை மாற்றிக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டும். வெகுநேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது,
  • பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.

Author: நிருபர் காவலன்