மீண்டும் எழுவோம் வீரம் தரிப்போம் …!

மீண்டும் எழுவோம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

மீண்டும் எழுவோம் வீரம் தரிப்போம் …!

சோழ கடலில் ஆடிய வீரம்
சோரம் போனதுவோ – பகை
சோர்வை அகற்ற கயவர் கூடி
சோடனை செய்ததுவோ

வில்லும் வாழும் பொருதியே களத்தில்
விண்ணில் எறியவர்
பண்ணிசை பாடியே பாமர மக்களை
படைக்கு அழைத்தவர்

இன்நிலை இழிதலில் விளைந்திடார் என்றே
இந்நிலை ஆடாதே
ஒரு நிலை வீழ்ந்திட ஒரு நிலை எழுந்திடும்
ஓர்மம் கொள்ளாதே

காலிடை நாசியும் புழுவாய் துடித்தால்
கலவரம் பிறக்காதோ
கயவர் இவரென பகைவர் அவரென
களமது முளைக்காதோ

எழுவதும் வீழ்வதும்
எழுவாய் பயனிலை
ஏற்றம் தரித்தல்
செயல் படு பொருள் நிலை

வழித்தடம் விழித்திடும் போதினில்
வழியெங்கும் பகையுடல் சரியும்
மொழியுடன் புரட்சி வெடித்திடும்
மொழியா புகழுடன் விடிந்திடும்

நஞ்சு கட்டியே களமது பொருதினார்
நாளை வந்திடுவார்
நலமுடன் வாழ தமிழ் மொழி அழ
நல் வழி செய்திடுவார் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 30-11-2021

Author: நிருபர் காவலன்