விபச்சார நிலையம் முற்றுகை – இளம் பெண்கள் கைது

விபச்சாரத்தில் ஈடுபட்ட
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

விபச்சார நிலையம் முற்றுகை – இளம் பெண்கள் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் குடாபாடுவ பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதி, சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு நேற்று (13) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, அந்த விடுதியை முகாமைத்துவம் செய்த ஆண் மற்றும் விபசாரத்துக்கு உதவிய மற்றும் அதில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையம் குறிப்பிட்டுள்ளது.

46, 40 மற்றும் 21 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீர்கொழும்பு நீதிமன்றில் இன்று(14) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Author: நிருபர் காவலன்