படகு கவிழ்ந்த விபத்தில் 160 பேர் பலி

கவிழ்ந்த அகதிகள் படகு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

படகு கவிழ்ந்த விபத்தில் 160 பேர் பலி
ஆப்பிரிக்காவின் காங்கோவில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்ததில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

காங்கோவில் சோகம் – படகு கவிழ்ந்த விபத்தில் 160 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், காங்கோ ஆற்றில் சென்று கொண்டிருந்தன. படகுகளில் 200-க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.

வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக படகுகள் கவிழ்ந்தன. இதில் படகுகளில் பயணம் செய்த 200-க்கும் அதிகமானோர் நீரில் முழ்கினர்.

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 39 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 61 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோரின் நிலைமை தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நீரில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

Author: நிருபர் காவலன்