குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா

ஸ்ரேயா
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா
கணவருடன் ஸ்ரேயா
தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.

ரஜினிகாந்த்துடன் சிவாஜி படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, சிக்குபுக்கு, ரவுத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் சில இந்தி, ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார்.

வழக்கமாக கணவருடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை பதிவிட்டு வந்த ஸ்ரேயா தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் தனக்கு குழந்தை பிறந்து ஓராண்டு ஆனதாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனக்கு குழந்தை பிறந்ததாக ஸ்ரேயா கூறியுள்ளார். அவர் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படமும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து ஸ்ரேயாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Author: நிருபர் காவலன்