வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம் ..!

ltte
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம் ..!

தொடரென பகைவர் உடல் விழ-நிலம்
தொட்டதை விட்டான் கடல் எழ
வன புலி என்றே இவன் எழ
வாடினர் பகைவர் விழி அழ

நெய்தலின் கரையில் பிறந்தவன் – ஈழம்
நெய்திட அன்றே வந்தான்
கொடிய வேந்தர் செயல் விழ- சேனை
கொடி நாட்டே போர் செய்தான்

கடலென தரையென விரிந்தவர்
கடுகதி வானிடை ஏறினர்
முப்படை தாங்கியே விண்ணிடை
முப் போரினை விரித்தனர்

அப்படை தளபதி அரியணை
அத்தனை வந்ததுமே குந்தினர்
எப் படை வந்தும் தோற்றனர் -ஆனையிறவில்
எங்களின் மறவரே தரித்தனர்

இப்படி புலி பலம் விரித்தவர் – ஈற்றில்
இப்படி விழும் படி சிரித்தனர்
இப்பகை வீழ்த்தியே வென்றிடும்
இப் புகழ் நிலை விடியலிடும் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 11-10-2021

Author: நிருபர் காவலன்