இதை சொல்ல உன்னால் முடியுமா ..?

இதை சொல்ல உன்னால் முடியுமா
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இதை சொல்ல உன்னால் முடியுமா ..?

இன்றே உலகம் படித்து விட
இணையம் வந்திடவா
எதிரி அந்த பகைவன் கொலையை
எழுதி வைத்திடவா

அதிர்வில் ஓடி அந்தபுரத்தை
அலசி வந்திடவா
சூரியன் ஓடி வாசல் வந்திட -சத்தி
சுழற்றி கூட்டிடவா

விண்ணில் ஏறிய தமிழ் விண்ணின்
விடு கதை சொல்லிடவா
அத்தனை கொள்ளையர் ஒன்றாய் கூடிய
ஐ பீ சி கொழுத்திடவா

ஆதவன் அன்றே ஆடி நின்றார்
ஆயுள் முடிந்ததுவோ ..?-அட டா
நெருப்பில் வீழ்ந்து நெறியை கொன்ற
நேர்த்தி இவர் அல்லவா

காலை கதிரில் மாலை மலரில்
கண்ணீர் கதையல்லவா – நீ
வடையுடன் கேசரி வாயில் அவிக்கும்
வீர கேசரியா

மனிதம் இல்லா மனிதன் அறிவில்
மறதி முதல் அல்லவா
பதிவு செய்தி பதியா மருவும்
பகலவன் இவர் அல்லவா

லங்காசிறியின் லட்சிய நெருப்பில்
லட்சங்கள் பார்த்துவிடு
இறந்தவர் நாளில் பணத்தை அள்ளும்
இழிநிலை செப்பிவிடு

புதின பலகையில் சங்கதி ஏறி
புதினம் தந்திடுமா ..?
தேனியில் ஏறி கூடு கட்டி
தேன் வலம்புரி வந்திடுமா ..?

யாழில் ஏறி அதிரடி ஓட -புது
யாழ் பிறந்திடுமா ..?
உதயனில் ஓடி தினக்குரல் பாட
உதயம் பொங்கிடுமா ..?

இதுவரை படித்ததில் எத்தனை இணையம்
இன்றே எண்ணிவிடு
இந்த துணிவு எவருக்கு வரும்
இருந்தால் சொல்லி விடு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 09-10-2021

Author: நிருபர் காவலன்