
ஓடும் அந்த அருவி பக்கம்
ஓடம் காத்திருந்தேன்
நீ வருவாயென பார்த்திருந்து
நிமிடங்கள் தொலைத்து நின்றேன்
அருவி பாடிய ஓசையில – உன்
ஆடல் கேட்கவில்லை
அந்த வேளையில் கண்ணுறக்கம்
அன்பே தெளியவில்லை
மூணு நாளா எடுத்து வைத்த
முன்னோட்டம் கரைந்திருச்சு
ஆள் மனதில் முளத்த ஆசை
ஆற்று மண்ணா கரைந்திருச்சு
உன் மீது குற்றமிட
உண்மையில் முடியவில்லை
உள்ள வேதனை மறைத்துவிட
உருளும் விழிக்கு தெரியவில்லை
நான் வரைந்த ஓவியத்தின்
நனையும் மையா நீயிருந்தாய்
உனை வரைய எனை வைத்து- நீ
ஊமையாகி ஏன் போனாய் …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 08-10-2021
- இவளுடன் வாழ விடு ..!
- தமிழன் அழிந்த நாள் ….!
- நினைவில் வைத்து கொள் …!
- இன்றே இறந்து விடு ….!
- ஒருநாள் அழுவாய் காத்திரு ..!
- இப்போ ஏன் அழுகிறாய் ..?
- ஆட்சி கவிழ்க்கும் ஆவிகள் …!
- இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!
- கத்திகள் எழுகிறது …!
- பெண் உலாவும் இரவு வரும் ..!
- பஞ்சம் வர ஆண்டவரே போய் வாங்க…!
- கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!
- இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!
- கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!