இணைந்து வாழ்வோம் இன்றே வா …!

இனவெறி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இணைந்து வாழ்வோம் இன்றே வா …!

வென்றதாய் உலகில் ஏறியே நன்று
வெடி குண்டாய் முழங்கிறாய்
வென்றே தமிழர் ஆள்வார் நன்று
வெட்கியே தலை குனிவாய்

தீர்வு வழங்கிட தீர்வு இருந்தும்
தீர்த்திட மறுக்கிறாய்
தீயாய் கலவரம் நாட்டில் வெடிக்க
தீயிடை நீ மடிவாய்

ஆண்டைய நாட்டில் அன்றைய வாதி
ஆள்கிறார் இன்று மறவாய்
முன்னைய வாதி தீவிரவாதி
முளைவிட்டான் இன்று பாராய்

வெள்ளையன் கொள்கை அறியா உலகில்
வெறியுடன் அலைகிறாய் -நாளை
வெடிகுண்டு தந்தே உயிர்களை தின்பான்
வெட்கியே தலை குனிவாய்

ஒற்றை ஆட்சியில் மிதக்கிறாய் நன்றோ
ஒருகணம் திரும்பி பாராய்
கடாபி நிலை காலடி சுற்றும்
கதறியே நன்று மடிவாய்

இதுவரை சொன்னேன் இனவெறி என்றால்
இன்றே உயிரை குடிப்பாய்
பூகோள அரசியல் புதிரை அறிந்தால்
புன்னகை வீசி தீர்வு கொடுப்பாய் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 25-09-2021
https://ethiri.com/

Author: நிருபர் காவலன்