யாழில் ஆவா குழுவினர் கைது

யாழில் வாகனத்தை அடித்து
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

யாழில் ஆவா குழுவினர் கைது

யாழ்ப்பாணம் – பரமேஸ்வரா சந்திக்கு அருகில் வைத்து, ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடன், நேற்று (19) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள், அவர்கள் பயணித்த கார் என்பவற்றை யாழ்ப்பாணம் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நல்லூர் – அரசடி பகுதியை சேர்ந்த முத்து என்பவர், நேற்று மாலை

, காரில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் எனும் தகவல் கிடைத்ததை அடுத்து , பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அவர்களின் காரை பின் தொடர்ந்து பரமேஸ்வர சந்திக்கு அருகில் வைத்து வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது காருக்குள் இருந்து 3 கிராம் ஹெரோய்னை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதையடுத்து, காரில் இருந்த முத்து உள்ளிட்ட நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Author: நிருபர் காவலன்