நான் வாழ உயிர் கொடு ..!

கவிதை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

நான் வாழ உயிர் கொடு ..!

இடையாலே எந்தன் இதயத்தை
இடித்தேண்டி போகிறாய்
முலை காட்டி எந்தன் ஆசைக்கு
மூட்டி தீ ஏன் வைக்கிறாய்

கூந்தலில் காய்கின்ற மல்லிகையாய்
கூடியே நானும் உலர்ந்திடவா –?
அத்தனை ஆனந்தம் உனக்கென்றால்
அடியே நானும் காய்ந்திடவா ..?

ஊருக்கு ஊரடங்கு போட்டு வைத்து
உள்ளத்துள் புகுந்து விடு
யாருக்கும் தெரியாமல் நாமினைந்து
யாகம் நடத்திடுவோம் வந்து விடு

கரை தேடும் அலையாக ஓடி வந்து – எந்தன்
காதல் கால்தடம் நனைத்து விடு
பூமழை பொழியும் மார்கழியாய் – உந்தன்
புன்னகை வந்து கொட்டி விடு

கட்டுடைத்து பாயும் வெள்ளம் போல – என்
கன்னத்தில் வந்து முத்தமிடு
நீயிட்ட முத்தத்தை நான் குடித்து – இந்த
நிகழ் காலம் வாழ உயிர் கொடு ..!

வன்னி மைந்தன்
ஆக்கம் 20-09-2021

Author: நிருபர் காவலன்