குளத்தில் மிதந்த மனித சடலம்

சடலம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

குளத்தில் மிதந்த மனித சடலம்

வட்டவளை, லொனெக் தோட்ட பாற்பண்ணைக்கு அருகில் இருக்கும் குளத்திலிருந்து இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நீராட சென்றிருந்த இருவருமே இவ்வாறு இன்றுக்காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

முதலாவது சடலம் காலை 6.10க்கும் இரண்டாவது சடலம் 7 மணிக்கும் மீட்கப்பட்டுள்ளது.

இருவரில் ஒருவர் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் வட்டவளை லொனெக் தோட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்த வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்​கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

சிலாபம் பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கதக்க சஜிந்த தில்சான் என்பவரும் லொனெக் தோட்டத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்க தக்க இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான சின்னையா ராஜா என்பவருமே இவ்வாறு   சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

Author: நிருபர் காவலன்