காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு

தவறான மருந்தை ஏற்றி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு

பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பணியாற்றிய அவர், புத்தளம் – அநுராதபுரம் வீதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மினுவங்கொட பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர் தன்னுயிரை மாய்த்துக்

கொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Author: நிருபர் காவலன்