எகிறும் படுகொலைகள் – மிதக்கும் சடலங்கள்

வீடு புகுந்து நபர் வெட்டிக்கொலை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

எகிறும் படுகொலைகள் – மிதக்கும் சடலங்கள்

மஹியங்கனை மொரகெட்டிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (12) நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதிலில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது,

மொரகெட்டிய  வேவத்த பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபர் இதன்போது உயிரிந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பலாங்கொடை மெதகந்தவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (12) இரவு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அயல்வீட்டினருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் குறித்த நபர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

மெதகந்தவத்த  பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த கொலை சம்பங்கள் தொடர்பில் அந்தந்த பிரசேதத்துக்கு பொறுப்பான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Author: நிருபர் காவலன்