இராஜினாமா செய்த எம்.பி மீண்டும் எம்.பியாகிறார்

அஜிட் நிவாட் கப்ரால்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இராஜினாமா செய்த எம்.பி மீண்டும் எம்.பியாகிறார்

தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவர், மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

தற்போதைய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்காக, தன்னுடைய தேசியப் பட்டியல் எம்.பி பதவியை, ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்தார்.

இந்நிலையில், மற்றுமொரு தேசியப் பட்டியல் எம்.பியான அஜிட் நிவாட் கப்ரால், தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

. அவர், மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவி​யேற்கவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

அஜிட் நிவாட் கப்ராலின் வெற்றிடத்துக்கே, ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்படவுள்ளார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author: நிருபர் காவலன்