அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றாளர்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ளது.

6 பொலிஸ் கொன்ஸ்டபிள், 2 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 2 பொலிஸ் சார்ஜன்ட் உட்பட 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களில் சிலர், கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் தேவையற்று பொலிஸ் நிலையம் செல்வதைத் தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Author: நிருபர் காவலன்