புகுந்த வீட்டில் மணமகள் தொல்லை ..!

புகுந்த வீட்டில் மணமகள் தொல்லை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

புகுந்த வீட்டில் மணமகள் தொல்லை ..!

வேட்டிக்குள் இன்றொரு தாய் கண்டேன் – இந்த
வேளையில் அவருக்கு நன்றி இட்டேன்
போதைக்குள் உறைந்த மனம் கண்டேன் – இந்த
பொதிகையை கண்டே நான் மிளிர்ந்தேன்

பெண் எல்லாம் தாய் என்று யார் சொன்னார் – இந்த
பேய்களின் சிசு கொலை யார் சொன்னார் ..?
முலை கொண்டும் பால் தரா பேயானார் – இந்த
மூளைகள் கொடும் செயல் யார் சொன்னார் ..?

வந்தாரை மதியாத கீழானர் – இந்த
வந்தேறி வீட்டில் கோலானார்
தந்தவன் தாலிக்கு மேலானார் -இந்த
தவளைக்கு யார் கால் வைத்தார் ..?

மடியாத சேலைக்கு கண் வைத்தார் – இந்த
மாடத்தை காணா அன்றிருந்தார்
கூவத்தில் வாழ்ந்ததை ஏன் மறந்தார் – இந்த
கூடத்தில் இன்னாரை ஏன் இழிந்தார் ..?

அகவையில் இன்றே சிறிதானார் – இன்றோ
ஆடும் பட்டம் போலானார் – இந்த
கீழிடை சிந்தையில் ஏன் நின்றார் – இந்த
கிழிசலை என்று இவர் எறிவார் …?

வன்னி மைந்தன்
ஆக்கம் 07-09-2021
https://ethiri.com/

Author: நிருபர் காவலன்