திருமணம் முடிக்க நான் வாரேன் …!

திருமணம் முடிக்க நான் வாரேன்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

திருமணம் முடிக்க நான் வாரேன் …!

தீச்சுவாலை சமரதுவாய்
தீண்டி என்னை வருபவளே
வழிமறித்து தாக்கிடவே
வழியமைத்து கொடுப்பவளே

ஊந்துகணை தோள் சுமக்க
ஊடறுப்பை நான் தொடுக்க
சமராட அழைப்பவளே
சம்மதமா நான் வென்றிடவே …?

சூரிய கதிர் முற்றுகையாய்
சுற்றி என்னை வலைத்தாயோ ..?
தவளை பாய்ச்சால் நடவடிக்கையில்
தத்தளித்து நின்றாயோ …?

நீரூந்து விசை படகாய்
நீந்தி வலம் வந்தவளே
துறைமுகத்தில் நான் புகுந்து
துணிவுடனே கடத்தி விட்டேன்

பூநகரி தாக்குதலோ
புது வரவை தந்து விட
ஏறி களம் ஆடி நின்றோம்
எரிமலையாய் வெடித்து வந்தோம்

ஆழ பிறந்தவர் நாம் தானே
ஆள்வோமே மீள்வோமே
தலிபான்கள் போல
தலைமையில மிதப்போமே

கொஞ்ச நாள் பொறுத்திருப்பாய்
கொளகை தன்னை வளர்த்திருப்பாய்
நஞ்சை கட்டி களம் திறக்கும்
நாளில் என்னை மணப்பாய் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 02-09-2021
https://ethiri.com/

Author: நிருபர் காவலன்