உன்னால் அழுகிறேன் …!

உன்னால் அழுகிறேன்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

உன்னால் அழுகிறேன் …!

விழியின் ஓரமா -உன்
நினைவு துளிகளே
கடந்து போகுமா – அந்த
காதல் நினைவுகள் …?

ஆடும் காற்றிலே
அடி வாங்கும் அலைகளாய்
வாழ்வு நோகுதே – இந்த
வையம் வெறுக்குதே

மீனை போல துள்ள
எனக்கு தெரியவில்லை
புலி போல பாய
உனக்கு புரியவில்லை

இரு வேறா பிரிவதற்கா
இணைந்தோம் அன்று
என் உயிரே என் உயிரே
எனக்கு பதில் சொல் நன்று

விதி போட்ட சாலையிலே
வீழ்ந்தவர்கள் நூறு
இதில் நீயும் நானும்
இந்த நூறில் ஒன்று

அழுவதால் காயம் ஆறுமா
ஆறுதல் சொல்ல இங்கு யாரம்மா
படைத்தவனே பழியை ஏற்பானா
பகலவனே பதில் சொல்வானா …?

வன்னி மைந்தன்
ஆக்கம் 17-08-2021
https://ethiri.com/

Author: நிருபர் காவலன்