உயிரே பதில் சொல்லாயோ ..?

உயிரே பதில் சொல்லாயோ
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

உயிரே பதில் சொல்லாயோ ..?

காட்சிகளாய் என் விழியில்
காலமெல்லாம் வீழ்பவளே – உன்
மூச்சு காற்று பட்டே
முழுதாக செயல் இழந்தேனே

தொடை தொட்டாடும்
தோகை கூந்தலை
வலை போட்டு நான் பிடிக்க
வாசலுக்கு வந்து விடு

செவந்த சட்டையில
செவப்பா நீ இருக்க
உன் உதட்டு பூவிதழை
உரிக்காம விடுவேனா ..?

கரை தேடும் அலைபோல
கண்ணால கதை சொல்ல
கறுத்த வான் மேகம்
கன மழை கொட்டுதடி

வீடு வந்த வெள்ளம் போல
விழி எல்லாம் நீ இருக்க
உன்னை மனம் மறந்திடுமோ
உயிரே பதில் சொல்லாயோ ..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 16-08-2021
https://ethiri.com/

Author: நிருபர் காவலன்