தோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது

நடிகை யாஷிகா
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

தோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது

விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.

தோழி இறந்த செய்தி யாஷிகாவுக்கு தெரியாது – தாயார் உருக்கம்
யாஷிகா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே வேகமாக கார் ஓட்டிச் சென்றதில், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் அவரின்

தோழியான வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த

விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகாவும் அவருடன் காரில் பயணித்த 2 ஆண் நண்பர்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை யாஷிகாவின் உடல்நிலை குறித்து அவரது தாயார் சோனல் ஆனந்த் கூறியிருப்பதாவது: “யாஷிகா தற்போது நலமுடன் உள்ளார். கால், இடுப்பு, மற்றும் வயிற்றுப்

பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. விபத்தில்

அவரது தோழி இறந்த செய்தி, அவருக்கு தெரியாது. ஆனால், பவணி குறித்து யாஷிகா நலம் விசாரித்தபோது, வெண்டிலேட்டர்-ல வச்சிருக்காங்கனு சொல்லியிருக்கோம்.

மருத்துவர்கள் இதுகுறித்த யாஷிகாவிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். சிகிச்சைக்கு

பின் 3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், 2 மாதம் கழித்து தான் அவரால் நடக்க முடியும் என்றும் மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Author: நிருபர் காவலன்