கோட்டா ,மைத்திரி கட்சி திடீர் சந்திப்பு – பேச போவது என்ன ..?

கோட்டா ,மைத்திரி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கோட்டா ,மைத்திரி கட்சி திடீர் சந்திப்பு – பேச போவது என்ன ..?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (26) காலை நடைபெறவுள்ளது.

இதனை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல் காலை 11.00 மணிக்கு நடைபெறும் என்றும், கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14

பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்ள வாய்ப்பு கோரியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் காலை 9.00 மணிக்கு கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் தலைவர், சிரேஷ்ட உப தலைவர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, பொருளாளர்

மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண ஆகியோருடன் தானும் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

Author: நிருபர் காவலன்