கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்

இராணுவம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்

அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறையை ஊக்குவிக்கும் அதே வேளை, கிளிநொச்சியில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பங்களுக்கு மேலும் 3 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

பூனேரி, காசிகுடாவில் உள்ள திரு. சின்னாவி நவரத்னம், மடுவில்நாடு திரு. ராமநாதன் மணிவத்தன் மற்றும் கிளிநொச்சி, பிலிமந்தனாரு, மயில்வானாபுரத்தில் உள்ள திரு. ஆறுமுகம் நகுலேஷ்வரன் ஆகியோருக்கு இந்த புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன.

புதுமனை குடிபுகும் விழாவின் போது வீடுகளின் பயனாளிகளுக்கு வீட்டு பாவனைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் கீழ் உள்ள படைவீரர்களின் நிதி, மனிதவளம் மற்றும் தொழிநுட்ப திறன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் புதிய வீடுகளுக்கு தனவந்தர்களின் நிதியுதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 5வது ஆயுதத் தளவாடங்கள் காலாட்படை, 24வது விஜயபாகு காலாட்படை மற்றும் 14ஆவது தேசிய பாதுகாப்புப் படை ஆகிய படையணி வீரர்களினால் இந்த வீடுகளின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெற்ற புதுமனை புகுவிழாவில்.

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Author: நிருபர் காவலன்