1983 கறுப்பு யூலை : கவனயீர்ப்பு போராட்டமும் கருத்தாடலும் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

கறுப்பு யூலை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

1983 கறுப்பு யூலை : கவனயீர்ப்பு போராட்டமும் கருத்தாடலும் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

தமிழினத்தின் மீதான சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக அமைந்த 1983 –

கறுப்பு யூலையினை மையப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று ம் , இணையவழி

கருத்தாடலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்;டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஆறாப்பெருந்துயராகவுள்ள 1983 கறுப்பு யூலை தமிழினஅழிப்பு நாட்களின் 38வது ஆண்டு நினைவினையொட்டி இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்று (யூலை23 – 2021) வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் லண்டனில் பிரதமர் வாயில் தளத்தில்

இடம்பெற இருக்கின்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் நீதிக்காக குரல்கொடுக்க, கொரோனா வைரஸ் பெருந்தொற்று சுகாதாரகட்டுப்பாடுகளுக்கு அமைய மாலை 3 மணிக்கு அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
.

Author: நிருபர் காவலன்