யாழில் இராணுவ சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை

சுட்டு தற்கொலை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

யாழில் இராணுவ சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை

இன்று (22) அதிகாலை நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையில்

இருந்த இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் வீட்டில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண விசாரணையின் பின்னர் உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Author: நிருபர் காவலன்