இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இயந்திரம்

புதிய இயந்திரம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இயந்திரம்

சேதன பசளை உற்பத்திக்கு பயன்படும் இலை குழைகளை சிறு சிறு துண்டுகளாக்கும் “அக்ரி ஷ்ரெடர் பிபி 1” எனும் புதிய இயந்திரம் அண்மையில் இராணுவத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய இயந்திரம் இராணுவத்தின் 4வது மின் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணி மற்றும் 5வது பொறியியலாளர் சேவை படையணியின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அக்ரி ஷ்ரெடர் பிபி 1 இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 3.5 மெட்ரிக் தொன் புதர்களை 10 மில்லி மீற்றர் துகள்களாக வெட்டக் கூடிய ஆளுமை கொண்டது என இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகை இயந்திரத்தின் சந்தை விலை ரூ. 750,000.00 ஆகும். ஆனால் மின் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணி மற்றும் பொறியியலாளர் சேவை படையணியின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்த இயந்திர தயாரிப்புக்கு சுமார் 150,000.00 ரூபாய் செலவாகியது.

இதை யாழ்- பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் பி.டி.எல்.ஏ.சி சிறிசேனா வடிவமைத்துள்ளார் என இராணுவம் தெரிவித்துள்ளது.

Author: நிருபர் காவலன்