நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்டி நட்ராஜ்

நட்டி நட்ராஜ்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்டி நட்ராஜ்

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நட்டி நட்ராஜ் அடுத்ததாக சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்கிறார்.

நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்டி நட்ராஜ்
நட்டி நட்ராஜ்


ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் புதிய படத்தை ஹாரூன் இயக்குகிறார். சைக்கோ திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

நட்டி நட்ராஜ்
படக்குழுவினருடன் நட்டி நட்ராஜ்

கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

Author: நிருபர் காவலன்