ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்

மாதவிடாய்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்

ஒழுங்கற்ற மாதவிடாய், அடி வயிறு அல்லது இடுப்பு பகுதியில் கடும் வலி, வீக்கம், சோர்வு, திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.

ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்…
ஒழுங்கற்ற மாதவிடாய்


மாதவிடாய் கோளாறு பிரச்சினையால் அவதிப்படும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தோன்றுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஒழுங்கற்ற மாதவிடாய், அடி வயிறு

அல்லது இடுப்பு பகுதியில் கடும் வலி, வீக்கம், சோர்வு, திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். அவை கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

மாதவிடாய் சுழற்சி முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை அடையும் பெண்களுக்குத்தான் கருப்பை வாய் புற்றுநோய் தோன்று வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வழக்கமாக

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது ஹார்மோன்களின் செயல்பாட்டில் பாதிப்பு நேரும். அதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு காரணமாகிறது.

உயரத்திற்கு ஏற்ப உடல் எடையும் இருக்க வேண்டும். அதைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தாலே அதுவும் ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கும்

காரணமாகிவிடும். தைராய்டு பாதிப்பு, பெண்களின் ஹார்மோனில் சீரற்ற தன்மையை உண்டாக்கிவிடும். அதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களுக்கு வழி வகுத்துவிடும். தொடர்ந்து

மாதவிடாய் சுழற்சிக்கு இடையூறு ஏற்பட்டுகொண்டிருந்தால் அது கருப்பை வாய் புற்றுநோய்க்கு அடித்தளம் அமைத்துவிடும்.

மேலும் தாய்ப்பால் கொடுக்காத பெண்கள், சிறு வயதிலேயே மாதவிடாய் சுழற்சியை எதிர்கொண்ட பெண்கள், புற்றுநோய் பாதிப்புக்குள்ளான குடும்பத்தில் பிறந்தவர்கள்

போன்றவர்களும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். மாதவிடாய் சுழற்சி தாய்மைக்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை. உடல் இயக்கம் சீராக செயல்படுவதையும் அது

உறுதி செய்கிறது. ஆதலால் ஆரம்ப நிலையிலேயே மாதவிடாய் சிக்கல்களுக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்…

Author: நிருபர் காவலன்