முல்லைத்தீவில் மக்கள் விபரங்களை சேகரிக்கும் இராணுவம் – அச்சத்தில் மக்கள்

சிங்கள இராணுவம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

முல்லைத்தீவில் மக்கள் விபரங்களை சேகரிக்கும் இராணுவம் – அச்சத்தில் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில், குடியிருப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும்
நடவடிக்கையில், பொலிஸார், நேற்று (14) ஈடுபட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகர், பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட
குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம்
வழங்கப்பட்டுள்ளது.

இவற்றைப் பூரணப்படுத்தி, ஒரு மணிநேரத்தில் வழங்குமாறும், பொலிஸாரால்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.1865ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்தின்

76ஆவது பிரிவுக்கு அமைவாகச் செய்யப்படும் ஆணைஎன, அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Author: நிருபர் காவலன்