5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

மூன்று வேடத்தில் சிவகார்த்திகேயன்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ஒரே நிறுவனத்தின் 5 படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரே நிறுவனத்தின் 5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக 5 படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஐந்து படங்களுக்கும் சேர்த்து ரூபாய் 75 கோடி அவருக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ’அண்ணாத்த’, ’தளபதி 65’, சூர்யா 40 ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Author: நிருபர் காவலன்