வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் -சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

பரிசோதகர் மீது தாக்குதல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் -சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்

வவுனியா, சாந்தசோலை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கிய நபரை தேடி விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொது சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரிடம் விசாரணையில்

ஈடுபட்ட போது குறித்த நபரால் பொது சுகாதார பரிசோதகர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு பொது சுகாதார பரிசோதகரை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக வவுனியா பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Author: நிருபர் காவலன்