பிளீச்சிங்’ செய்வதால் வெளுக்கும் முகமும்.

பிளீச்சிங்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

பிளீச்சிங்’ செய்வதால் வெளுக்கும் முகமும்.

சரும நிறத்தை மெருகேற்றுவதற்காக நிறைய பெண்கள் முகத்தில் ‘பிளீச்சிங்’ செய்துகொள்கிறார்கள். ஆனால் பிளீச்சிங்குக்கு பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில்

ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் ரசாயனம் உள்ளது. இது சருமத்தில் உள்ள முடியை ஒழிக்கும்தன்மை கொண்டது. அதனால் பார்ப்பதற்கு சருமம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அது நிரந்தரமானதல்ல.

மேலும் சருமத்தை பிளீச்சிங் செய்யும்போது மெலனின் உற்பத்தி குறையும். மெலனின் என்பது மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படும் செல்களால் உற்பத்தி செய்யப்படும் முக்கிய

நிறமியாகும். சருமத்தில் மெலனின் எவ்வளவு அதிகமாக உற்பத்திசெய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு சருமத்தின் வெளிப்புற அடுக்கு கருமையாக இருக்கும். மெலனின் உற்பத்தி

பெரும்பாலும் மரபியலுடன் தொடர்புடையது. கருமையான சருமம் கொண்டவர்களிடம் மெலனின் உற்பத்தி அதிகமாக இருக்கும்.

ஹைட்ரஜன் பெராக்சைடு, ஹைட்ரோ குயினோன் போன்ற சருமத்திற்கு பிரகாசம் கொடுக்கும் பிளீச்சிங் பொருட்களை உபயோகிக்கும்போது சருமத்தில் உள்ள மெலனோசைட்டுகளின் அளவு

குறையும். அதன் காரணமாக மெலனின் உற்பத்தியும் குறைந்துவிடும். அதனால் காலப்போக்கில் சருமத்தின் நிறம் மங்கத் தொடங்கும்.

பிளீச்சிங் செய்யும்பொது சருமத்திற்கு சில நன்மைகள் கிடைக்கின்றன. பக்கவிளைவுகளும் உண்டாகின்றன. அதுபற்றி பார்ப்போம்.

நன்மைகள்: பிளீச்சிங், சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகளை ஓரளவு கட்டுப்படுத்தும். முகத்தில் உள்ள கறைகள், அழுக்குகளை போக்கவும் உதவும். முகத்திற்கு தற்காலிக

பொலிவையும் கொடுக்கும். நிறமாற்றம் மற்றும் வயது காரணமாக ஏற்படும் சரும மாற்றங்களையும் தற்காலிகமாக போக்கும்.

சில பெண்கள் சரும பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் அவர்கள் முகம் சோர்வாக காணப்படும். சருமத்தில் முடிகளும் ஆங்காங்கே தென்படும்.

அப்படிப்பட்டவர்கள் பிளீச்சிங் செய்வதன் மூலம் பிரகாசமான சருமத்தை பெறலாம். ‘பேஸ் ப்ளீச் கிரீம்’களில் உள்ள ரசாயனங்கள் சருமத்தை ஒளிரச்செய்து 10 நிமிடங்களுக்குள் முகத்திற்கு உடனடி பிரகாசத்தை அளிக்கும்.

பக்கவிளைவுகள்: பிளீச்சிங் செய்தபிறகு தோல் அழற்சி ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும். சிலருக்கு சருமம் சிவத்தல், கொப்புளம், படை, வீக்கம், அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள்

தென்படும். மார்பு, அக்குள் மற்றும் இடுப்பு பகுதிகளிலும் பாதிப்பு உருவாகலாம். சில பேஸ் பிளீச்சிங் கிரீம்களில் நச்சுத்தன்மை கொண்ட பாதரச திரவம் இருப்பதாக கூறப்படுகிறது. அது

உண்மையாக இருக்கும் பட்சத்தில் உணர்வின்மை, சோர்வு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு

உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சிலர் பாதரசம் ஏற்படுத்தும் பக்க விளைவுகளில் இருந்து மீள நீண்ட காலமாகும். சிலருக்கு மார்பு பகுதியில் பரு உண்டாகும்


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Author: நிருபர் காவலன்