நாளை அழுவாய் ….!

நாளை அழுவாய் ..
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

நாளை அழுவாய் ….!

அத்தை கருப்பையில
அவ தாரம் எடுத்தவளே
உன்னை நான் மணக்க
உரிமம் தந்து விடு

வெத்தலையா நீ சிவக்க
வேகி மனம் துடிக்க
ஒத்தையில தவிப்பவளே
உனை சுமக்க நான் வரவா?

உருகும் பனி மலையே
உதயத்தை துரத்திட வா ..?
அழகான மாரி மழை
அழைத்து வந்திட வா ..?

சக்கரையா நீ இருக்க
சமையலறை நான் தரவா ..?
உத்தரவு தந்து விடு
ஊற்றி டீ வைத்திட வா …?

கண்ணில் என்ன கலக்கமோ
கண்ணே என்ன தயக்கமோ ..?
ஏனோ இன்று உனக்கு
என்னை பிடிக்கலையோ ..?

தேடி தேடி வருகிறேன்
தேவை இன்றி போகிறாய்
நாளுமே ஏமாற்றம்
நாட்டி ஏனோ நடக்கிறாய் ..?

சொந்தம் என்று வந்தவனை
சோகத்தில வைத்தவளே
நான் மறந்து போகிறேனே
நாளை நீ அழுதிடுவாய் ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம்-05-05-2021

Author: நிருபர் காவலன்