சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்

திருமணம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்

கோவையை அடுத்த சூலூர் நீலாம்பூர் பகுதியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அவருடன் அவரது நண்பரான

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பூபதியும் தனியே வீடு எடுத்து தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மணிகண்டனுக்கு, அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். எனவே

மணிகண்டன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தர்மபுரிக்கு

மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இதற்கு பூபதி தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து உதவியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் பொலிஸார் தர்மபுரிக்கு சென்று சிறுமியை மீட்டனர். மணிகண்டனை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதை அடுத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற

மணிகண்டன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பூபதி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து பொலிஸார் கைது செய்தனர்.

Author: நிருபர் காவலன்