லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் – படம் உள்ளே

லண்டன் இலங்கை தூதரகம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் – படம் உள்ளே

இன்று 04-05-2021 மதியம் லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் அறவழி போராட்டத்தை நடத்தினர் ,


இலங்கை அரசு புரிந்த மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள் ,இனப் படுகொலை, புலிகளின் பெயரால் கைது செய்ய பட்ட அப்பாவி மக்களை விடுதலை செய்ய கோரியும் ,தமிழர்களை

துன்புறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டாம் என கோரியும் ,பாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வினை வேண்டியும் இந்த போராட்டம் முன்னெடுக்க பட்டுள்ளது

இந்த நிகழ்வு சமகால கொரனோ விதிகளை பின்பற்றி ,காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்க அமைதி வழியில் நடத்த பட்டுள்ளது ,

எனினும் சிங்கள அரச மற்றும் உளவுத்துறை அதிகாரிகளினால் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்களை காணொளி ,மற்றும் புகைப்படங்கள் பிடிக்க பட்டுள்ளன

இவ்வாறு பிடிக்க பட்ட காட்சிகளினால் அங்கு கலந்து கொண்ட மக்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் என அஞ்ச படுகிறது

இங்கே கலந்து கொண்ட மக்களை கழுத்து வெட்டுவேன் என இராணுவ தளபதி ஒருவர் முன்னர் தெரிவித்து

அவை லண்டன் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்தத நிலையில் ,அவ்விதம் இவர்களை படம் பிடித்தவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளக்க நேரிடும் என்பது இயல்பாகிறது

தமிழர்களை கொன்று குவித்த சகோதர்கள் ஆட்சி இலங்கையில் இடம் பெற்று வரும் நிலையில் சொல்லென்னா அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் உள்ளாகி வருகின்ற நிலையில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

லண்டன் இலங்கை தூதரகம்
லண்டன் இலங்கை தூதரகம்

Author: நிருபர் காவலன்