முல்லைத்தீவில் எரிந்த கடைகள் -சிலர் காயம்

எரிந்த கடைகள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

முல்லைத்தீவில் எரிந்த கடைகள் -சிலர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை

பகுதியில்(29) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்துள்ளதோடு மேலும் ஒரு கடை பகுதியளவில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் கடையின் உரிமையாளர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை

பகுதியில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினை தொடர்ந்து தீ பரவி இரண்டு கடைகள் முற்றாக எரிந்துள்ளதுடன் மற்றும் ஒரு கடை பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இந்த தீ விபத்தின் போது முத்தையன் கட்டினனை சேர்ந்த 72 அகவையுடைய செல்லப்பா அரிராசசிங்கம்

என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒட்டுசுடுட்டான் பிரதேச வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

Author: நிருபர் காவலன்