கருத்தடை மாத்திரை உட்க்கொண்டால் – கரு தரிக்காதா ..?

கருத்தடை மாத்திரை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கருத்தடை மாத்திரை உட்க்கொண்டால் – கரு தரிக்காதா ..?

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பெண்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமா என்ற சந்தேகம் ஏராளமான பெண்களின் மனதில் உள்ளது.

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பெண்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமா என்ற சந்தேகம் ஏராளமான பெண்களின் மனதில் உள்ளது.

இன்றைய காலத்தில் தாமதமாக குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் பிறப்புக் கட்டுப்பாட்டு முறையைப்

பின்பற்றுகின்றனர். நிறைய பெண்களுக்கு இதை பயன்படுத்திய பிறகு கர்ப்பம் தரிக்க முடியாமல் போய் விடுமோ என்ற எண்ணம் எழுகிறது என்று கூறியுள்ளனர்.

உண்மையில் பல வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய கருத்தடை சாதனங்கள் (IUD கள்) சில நேரங்களில் இடுப்பு அழற்சி நோயை ஏற்படுத்தி கருவுறாமைக்கு காரணமாகிறது. ஆனால் தற்போதுள்ள கருத்தடை மருந்துகள் அப்படி இருப்பதில்லை.

நீங்கள் தற்போது மாத்திரை, கருத்தடை சாதனங்கள் என்று எதை பயன்படுத்தினாலும் தற்காலிகமாக கருவுறுதலை தடுப்பதோடு மீண்டும் கருவுறுதலை நிலைநிறுத்த உதவுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், முதன் 3-4 மாதங்களுக்கு

முறையற்ற மாதவிடாய் சுழற்சியானது ஏற்படும். ஆனால் 4 மாதங்களுக்கு பின்னரும் இந்த நிலை நீடித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இருப்பினும் உங்க உடல் இதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். எந்தவொரு ஹார்மோன் சிகிச்சையையும் எடுப்பதற்கு முன் உங்க மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

Author: நிருபர் காவலன்