பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்கள்

பிரசவத்துக்கு பிறகான தளர்ந்த மார்பகங்கள்

பிரசவத்துக்கு பிறகு மார்பகங்கள் தளரத்தான் செய்யும். உடல் எடை அதிகரித்த பின், வயதாக வயதாக மார்பகங்கள் (Sagging Breast) தளர்வடையும். மார்பகங்கள் தளர்வடையாமல் இருக்க சில வழிகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.


மார்பகங்கள் தளர்வடைய நிறைய காரணங்கள் உள்ளன. வயதாக, வயதாக மார்பகங்களை தாங்கும் தசைகள் பலவீனமாகும். பிரசவத்துக்கு பின் குழந்தைகளுக்கான மார்பகங்களில் பால் சுரக்கும். அப்போது மார்பகங்கள் பெரிதாகின்றன. குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் தருவதை

நிறுத்திய பிறகு, பால் சுரப்பது நிற்கும். இப்போதும் மார்பகங்கள் தளர்வடையும். உடல் எடையை குறைக்க முயற்சித்தால் மார்பகங்களை ஓரளவுக்கு தளர்வடையாமல் தடுக்கலாம். கர்ப்பமான

பின் மார்பகங்களின் அளவு பெரிசாகும் பிரசவத்துக்கு பின் பால் ஊட்டுவதை நிறுத்திய பின் மார்பகங்களின் அளவில் மாற்றம் நடக்கும். இதனால் சருமத்தில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன.

உடல் எடையை குறைக்க திட்டமிட்டால் மாதம் 2-3 கிலோ என மெதுவாக, நிதானமாக பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கலாம். ஒரே மாதத்தில் அதிக ஒர்க் அவுட் செய்து 5 அல்லது 5 + கிலோக்கு மேல் குறைக்க முயற்சி செய்தால் மார்பகங்கள் தளர்ந்துவிடும். சிகரெட் பிடிக்கும்

பழக்கம் இருப்பவர்களுக்கு, விரைவில் மார்பகங்கள் தளரும். புற்றுநோய் வரும் வாய்ப்புகளும் அதிகம். அதிக உடல் எடை இருந்தால் அதைக் குறைக்க பாருங்கள். அதிக குண்டாக இருந்தால், பெரிய மார்பகங்களாக மாறி கொண்டே வரும். தளர்வதும் விரைவில் ஏற்படும். சரியான அளவில் பிராவை அணிவது நல்லது. இரவில் தூங்கும்போது மட்டும் பிராவை தவிர்க்கலாம்.

தாய்மார்களின் மார்பகங்கள் தளராமல் இருக்க இயற்கை வழிகள்…

புஜங்காசனா

புஜங்கா என்றால் கோப்ரா (பாம்பு). பாம்பு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அதுபோல பார்ப்பதற்கு தெரியும் இந்த ஆசனத்தின் செயல்முறை.

குப்புறப் படுத்துக்கொள்ளுங்கள். கால்கள் சரியாக நீட்டி இருக்கட்டும். கைகள் பக்கவாட்டில் இருக்க வேண்டும். உங்களது கைகளை தோள்பட்டைக்கு அருகில் கொண்டு வாருங்கள்.

அப்படியே மெதுவாக மூச்சு இழுத்தபடி தலை, தோள்பட்டை, மார்பகங்கள், நெஞ்சு, வயிறு பகுதியை தூக்குங்கள். இடுப்பு, தொடை, கால்கள் தரையிலே பதிந்திருக்க வேண்டும். 10 நொடி

மூச்சை ஹோல்ட் செய்த பின் பிறகு மெதுவாக மூச்சைவிட்டபடி முன்னே இருந்த அதே நிலையில் கீழே படுத்துக் கொள்ளுங்கள்.
இதுபோல 3 முறை செய்யுங்கள்.

இந்த ஆசனம் தளர்ந்த மார்பகங்களை டைட்டாகும். குறைந்தது 3-4 மாதங்கள் வரை சரியாக செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

ஐஸ் மசாஜ்

ஐஸ் மசாஜ் செய்தால் தளர்ந்த தசைகள் மீண்டும் டைட்டாக உதவும். 2 ஐஸ் கட்டிகளை துணியில் வைத்து, கட்டி, ஒரு மார்பகத்துக்கு ஒரு நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள். அதற்கு மேல் செய்தால், மறுத்துபோகிவிடும். எனவே ஒரு நிமிடம் போதும். சர்குலர் மோஷனாக மசாஜ் செய்ய வேண்டும்.


உலர்ந்த, சாஃப்டான துணியால் துடைத்து விட்டு, சரியான அளவில் இருக்கும் பிராவை அணிந்து கொள்ளுங்கள். பின்னே சாய்ந்த சேர் அல்லது தலையணை வைத்தோ 30 நிமிடங்களுக்கு சாய்ந்து கொள்ளுங்கள். இதுபோல தினமும் 2 முறை செய்யுங்கள். 3 மாதம் கழித்து உங்களுக்கு மாற்றம் தெரியும்.

ஆலிவ் எண்ணெய்

உள்ளங்கையில் தேவையான ஆலிவ் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். நன்றாக உள்ளங்கையை தேய்த்துக் கொள்ளுங்கள். இப்போது கீழிருந்து மேலாக 15 நிமிடங்கள் வரை

மிதமாக மசாஜ் செய்யுங்கள். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். செல்களை ரிப்பேர் செய்யும். வாரத்துக்கு நான்கு முறை இந்த மசாஜை செய்யலாம்.
ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், அவகேடோ எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.

வெள்ளை முட்டை மாஸ்க்

ஒரு வெள்ளை முட்டையில், வெங்காய ஜூஸ் கலந்து அதை மார்பகங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் இருமுறை செய்து வரலாம்.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை…

அதிகமான டயட்டில் இருக்கவே கூடாது.
உணவை சாப்பிடாமல் தவிர்க்க கூடாது.
நேரம் கிடைக்கும் நீச்சல் அடிக்கலாம்.


ஜாக்கிங், ரன்னிங் போன்றவை செய்ய வேண்டாம்.
வாக்கிங் சென்றால் சரியான டைட்டான பிராவை அணிந்து கொள்ளுங்கள்.
எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காருங்கள்.
கூன்போட்டு நடக்க வேண்டாம்.


ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுங்கள்.
பிராவை சரியான அளவில் அணிவது மிக மிக முக்கியம்.

Spread the love

Author: நிருபர் காவலன்