தனுஷுடன் மோதும் நயன்தாரா

தனுஷுடன் மோதும் நயன்தாரா

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் தனுஷும், நயன்தாராவும் பட வெளியீட்டில் மோத உள்ளனர்.

தனுஷுடன் மோதும் நயன்தாரா
தனுஷ், நயன்தாரா
தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் கர்ணன். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். தமிழில் உருவாகியுள்ள

இப்படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளார். மேலும் இப்படத்தை கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.

ர்ணன் மற்றும் நிழல் பட போஸ்டர்கள்

இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மலையாள படமான ‘நிழல்’ அதே தினத்தில் வெளியாக உள்ளதால், இந்த இரண்டு படங்களுக்கு கடும் போட்டி நிலவும் என

எதிர்பார்க்கப்படுகிறது. நிழல் படத்தில் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்துள்ளார். பிரபல படத்தொகுப்பாளரான

அப்பு என் பட்டாத்திரி இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.

Spread the love

Author: நிருபர் காவலன்