பிரதமர் மோடியை சந்தித்த மாதவன்

பிரதமர் மோடியை சந்தித்த மாதவன்

இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் மற்றும் நடிகர் மாதவன் இருவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

பிரதமர் மோடியை சந்தித்த மாதவன்
மோடி – மாதவன்


நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக

நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லரை பார்த்த பிரபலங்கள் பலரும் மாதவனை பாராட்டி வருகின்றனர்.

மாதவன்

இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் மற்றும் நடிகர் மாதவன் இருவரும் நேரில் சென்று சந்தித்த புகைப்படத்தை மாதவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Spread the love

Author: நிருபர் காவலன்