உடல்நலக் குறைவால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

உடல்நலக் குறைவால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் கார்த்திக் சென்னையில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

உடல்நலக் குறைவால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
நடிகர் கார்த்திக்

நடிகர் கார்த்திக்கிற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவமனையில் கார்த்திக் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

அதன்பின், தீவிர சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கார்த்திக்கை ஓய்வெடுக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், அவர் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்துக்கு பின்னர் சென்னை திரும்பிய கார்த்திக்கிற்கு இன்று மாலை திடீரென மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அடையாறில் உள்ள

மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Author: நிருபர் காவலன்