மண் தரையில் தூங்கிய சிம்பு – ‘எளிய மனிதர்’ என வியந்து பாராட்டிய வெங்கட் பிரபு

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

மண் தரையில் தூங்கிய சிம்பு – ‘எளிய மனிதர்’ என வியந்து பாராட்டிய வெங்கட் பிரபு

மாநாடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மண் தரையில் தூங்கிய சிம்பு – ‘எளிய மனிதர்’ என வியந்து பாராட்டிய வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு டுவிட்டரில் பகிர்ந்த சிம்புவின் புகைப்படம்


நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்புவை எளிய மனிதர் என குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த 2 புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

. அதில் ஒரு படத்தில் சிம்பு, மண் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். மற்றொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்கத்தில் நின்று எஸ்.ஜே.சூர்யா பேசிக்

கொண்டிருக்கிறார். இந்தப் படங்களைப் பார்த்த சிம்பு ரசிகர்கள், அதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

Author: நிருபர் காவலன்