கொரோனாவால் பாதிக்கப்பட்ட சந்தானம் பட நடிகை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சந்தானம் பட நடிகை

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது

. மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நடிகர்கள் அமீர்கான், மாதவன், மிலிந்த் சோமன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வைபவி ஷாண்டில்யா

இந்நிலையில் தமிழில் சந்தானத்துடன் சக்கபோடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வைபவி ஷாண்டில்யா தனக்கும் தனது தாய், தந்தையரும் கொரோனா

தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மும்பையில் தான் வசிக்கும் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின்

எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Spread the love

Author: நிருபர் காவலன்